77 நாட்கள் ஊரடங்கு.... பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோ - ப்பா ! எப்படி மாறிட்டாங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?, 'பீட்சா', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் பூஜா ராமச்சந்திரன். இவர் நடிக்கவருவதற்கு முன்பு எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜான் குக்கேன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ''நேற்றுடன் வீட்டுக்குள் அடைபட்டு 77 நாட்கள் ஆகிறது. நான் பலமிக்கவளாகவும், ஃபிட்டானவளாகவும் மாற விரும்பினேன். ஊரடங்கின் போது எனது குறைபாடுகளை  சரிசெய்ய முடிவு செய்தேன். விருப்பமான உணவுகளை சாப்பிடவில்லை. எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டேன். ஒரு நாளில் ஒரு மணிநேரம் தான் எனக்கு தேவைப்பட்டது''  என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவிற்கு பிரபலங்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actress Pooja Ramachandran shares her transformation pic during lockdown | லாக்டவுனில் பூஜா ராமச்சந்திரன் வெளியிட்ட டிரான்ஸ்ஃபர்மேசன் ஃப

People looking for online information on Coronavirus lockdown, Instagram, Pooja Ramachandran will find this news story useful.