அனிருத் ஹீரோன்னா நான் அந்தப் படத்தை தயாரிக்க ரெடி - சிவகார்த்திகேயன் அதிரடி ஆஃபர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சனையிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட உலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கைக்கொடுத்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள், யூட்யூப் குறும்படங்கள், காணொளிகள், ஓடிடி வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் எனலாம்.

Anirudh shares an instagram photo of him sivakarthigeyan comments

இப்படி திரை உலகம் ஏற்கனவே அளித்த கொடையான இந்தப் படங்கள்தான் பலருக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது லாக்டவுனில் இருந்தாலும், நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மக்களை மகிழ்விக்க தவறவில்லை. தனிப்பட்ட முறையில் ரசிகர்களுடன் உரையாடியும், வீடியோக்கள் வெளியிட்டும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இயங்கியும் தங்களின் ஆதரவை அளித்து வருகிறார்கள்.

அண்மையில் இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷ்ஷான ஒரு ஃபோட்டோவை அழகான கேப்ஷனுடன் பதிவிட்டார். இதற்கு லைக்ஸ் குவிந்து கொண்டிருக்க, நடிகர் சிவகார்த்திகேயேன் அதிரடியாக ஒரு கமெண்ட்டை போட்டார்.

அதில் அவர் ‘சார்ர்ர்ர், எப்பன்னாலும்  சரி, என்னிக்கானாலும் சரி.... நீங்க ஹீரோவா நடிக்கிற ஃபர்ஸ்ட் படம் புரொட்யூசர் நான்தான்’ என்று பதிவிட்டார். இந்தக் கமெண்டுக்கு பல ரசிகர்கள் லைக்ஸ் & கமெண்ட்ஸ் போட்டு இந்தப் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

அனிருத் சினிமாவில் தனக்கு நடிக்க ஆசை இல்லை, இசை ஆல்பத்தில் நடிக்கத்தான் விருப்பம் என்றும் இதற்கு முன்பே கூறியது குற்ப்பிடத்தக்கது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A lil to the left.. to the right.. fix.. Pc @kunaldaswani

A post shared by Anirudh (@anirudhofficial) on

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh shares an instagram photo of him sivakarthigeyan comments

People looking for online information on Anirudh, Sivakarthikeyan will find this news story useful.