Happy birthday Mani Sir இயக்குனர் மணிரத்னத்துக்கு வாழ்த்து சொல்லிய அட்லி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியத் திரையுலகின் ட்ரெண்ட் செட்டரான இயக்குனர் மணிரத்னத்துக்கு இன்று (ஜூன் 2) பிறந்த நாள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அவரது படங்கள் நேரடியாகவும் மொழியாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்துள்ளன.

Atlee wished HBD to director mani ratnam in his instagram post

எழுத்தாளர் கல்கியின் புகழ்ப்பெற்ற வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக திரைக்கு அறிமுகம் செய்தவர் மணிரத்னம். அவரது முதல் படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவருக்கும் இன்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது

மணி சார் என்று செல்லமாக அழைக்கப்படும் மணிரத்னத்துக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் அட்லி மணி சாருடன் எடுத்த புகைப்படத்துடன் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday Mani sir

A post shared by Atlee (@atlee47) on

 

மறக்க முடியாத திரைப்படங்களை நமக்களித்த இயக்குனர் மணிரத்னத்னத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Atlee wished HBD to director mani ratnam in his instagram post

People looking for online information on Atlee, HBD Mani Sir, Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.