www.garudabazaar.com

தென் தமிழகத்தில் உள்ள விவேக்கின் பூர்வீக வீடு.. பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வெளியிட்ட PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் விவேக்கின் பூர்வீக வீடு மற்றும் அவரது சமாதி மற்றும் முன்னோர் சமாதியின் புகைப்படங்களை பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சாமி தரிசனம் செய்த கோயில் பிரசாதத்தை விஜய்க்கு கொடுப்பீங்களா?".. S.A. சந்திரசேகர் நச் பதில்.  

150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் பத்மஸ்ரீ   விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விவேக். 90 களின் பிற்பகுதியில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழந்தவர் விவேக்.  இவர் தனி காமெடியனாகவும் சக நடிகரான வடிவேலுவோடு இணைந்து நடித்த காட்சிகளும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி ஆகிய நடிகர்களோடும் இணைந்து சில படங்களில் விவேக் நடித்துள்ளார். சமூகக் கருத்து சார்ந்த திரைப்படங்களில் நடித்ததால் சின்னக்கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார்.

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

Images are subject to © copyright to their respective owners.

சில படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திரையில் நடித்துள்ள விவேக், பொது வாழ்க்கையில் சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு க்ரீன் குளோபல் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இயக்கத்தை அவர் வழி நடத்தினார்.

கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி விவேக் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். 

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் விவேக் மறைவுக்கு பின் சென்னை சாலிகிராமம் பகுதியில் நடிகர் விவேக் வீடு இருக்கும் சாலைக்கு நடிகர் விவேக்கின் பெயரை தமிழக அரசு வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் சொந்த கிராமத்தில் உள்ள அவரது சமாதி மற்றும் பூர்வீக வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  கல்வெட்டு ஆய்வாளர் கி. ச. முனிராஜ் வாணாதிராயன், முகநூல் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பத்மஸ்ரீ விவேக் - சமாதிக் கல்வெட்டு. திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் அன்புடன் கொண்டாடப்பட்டு, நீங்காப் புகழ்பெற்ற சின்னக் கலைவாணர், பத்மஸ்ரீ விவேக் அவர்களின்  குடும்பத்தவர் புதைக்கப்பட்ட சமாதிகளில் ஒன்று 1955 ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 18 ம் தேதியைச் சேர்ந்தது.

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

Images are subject to © copyright to their respective owners.

ஐந்தடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்த சமாதியில் மேலடுக்கிலும் நடு அடுக்கிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. மேற்கண்ட சமாதி தெய்வத்திரு.விவேக் அவர்களின் தந்தை திரு. சிவ அங்கையாப் பாண்டியன் அவர்களின் பாட்டியாராகிய அன்னம்மாள் ஆவார்கள். இச் சமாதியில் அடங்கிய நிலம், சர்வே எண், ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு.விவேக் அவர்களின் பூட்டனார் பெயர் பிலவேந்திரத்தேவர் என்றும், அவருக்கு பேயாண்டித் தேவர் எனும் மற்றொரு பெயரும் உண்டு என்பதும் தெரிய வருகிறது. இங்குள்ள அவர்கள் குடும்ப சமாதிகளில் விவேக் அவர்களுடன் அவரது தந்தை, தாயார் சமாதிகளும் அடக்கம்.

இந்த கல்வெட்டில் வெட்டிய எழுத்துக்கள் வேறாகவும், அதன்மீதே பெயிண்ட் வைத்து தூரிகை மூலம் எழுதப்பட்ட வரி வடிவம் வேறாகவும் உள்ளது. இதன் சரியான வடிவத்தை அந்த பெயிண்டை நீக்கிய பிறகே கண்டறிய முடியும். மேலும் இதில் சுண்ணாம்பு பூச்சுகள் வேறு ஆங்காங்கே உதிர்ந்து உள்ளது. இதைச் சுத்தம் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

Images are subject to © copyright to their respective owners.

மேற்கண்ட சமாதுகள், தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் தாலுகா, பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ளவை.

கல்வெட்டு 1.

1. நஞ்சை சர்வே உ899 நிர் செண்

2.டு 98 ல் கட்டி - - - செண்டு 822 வல

3. தில் - கை கொண்டான வகைக்கு.

கல்வெட்டு 2.

1. ௲௯ய௫௵ கார்த்திகை ௴

2. யஅ௳ புதன் கிளமை பெலயே

3. ந்திரத்தேவர் ஸ்திரி அன்னம்மாள்

4. சாவேளரெனுக்குள் மரித்தா

5் ள் பெருங்கோட்டூர்

பூட்டப்பட்டிருந்த இந்த சமாதியை அடியேனுக்காகத் திறந்து படிக்கவும்,  பத்மஸ்ரீ விவேக் அவர்களின் பூர்வீக வீட்டினை படம் எடுக்க அனுமதித்ததற்கும், உதவி செய்த விவேக் அவர்களின் ரத்த உறவினர் திரு. சிவஞான பாண்டியன் அவர்களுக்கும், அங்கு எனக்கு உடனிருந்துதவி செய்த பெருங்கோட்டூர் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏". என ஆய்வாளர் கி. ச. முனிராஜ் வாணாதிராயன் பதிவிட்டுள்ளார்.

Also Read | விஜய் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆக இதுதான் காரணமா.? S.A. சந்திரசேகர் சொல்வது என்ன?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vivek Memorial Place Latest Photo Ancestor House

People looking for online information on Vivek, Vivek Memorial Place will find this news story useful.