www.garudabazaar.com

"நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் Throwback வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானது அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Actor Vivek about Mayilsamy throwback video emotional

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நண்பர் நட்டி, இயக்குனர் செல்வராகவனுக்கு".. பகாசூரன் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்!!

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார்.  2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக் மயில்சாமி பற்றி பேசியுள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்து வந்த விவேக், கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். அவரும், மயில்சாமியும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்து நிலைத்து நிற்கக்கூடிய வகையில் இருப்பதாகும்.

விவேக் மறைவுக்கு பின்னர் தற்போது மயில்சாமியும் காலமான சூழலில், முன்பொரு நிகழ்ச்சியில் மயில்சாமி பற்றி விவேக் பேசிய வீடியோக்கள் பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.

Actor Vivek about Mayilsamy throwback video emotional

Images are subject to © copyright to their respective owners.

"மயில்சாமி கேரக்டர் ரொம்ப அற்புதமான கேரக்டருங்க. பாரதிராஜா சார் கிட்ட ஒரு மணி நேரம் உட்கார்ந்து நான் இவன் பண்ணதெல்லாம் சொன்னேன்னு வச்சுக்கோங்களேன், அவன பத்தி ஒரு படம் எடுக்கணும்னு சொல்லுவாரு. ஏன்னா இப்படி ஒருத்தன் வாழ்றான், நம்ம வாழுற காலத்துல வாழ்றான் சார். இவன் இளிச்சவாயனா, நல்லவனா. இளிச்சவாயன் / நல்லவன்னு போட்டு நீங்க டிக் பண்ணிக்கணும். தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல செயின் வாங்கி, எம்ஜிஆர் படம் போட்ட பெரிய செயின்ங்க. எம்ஜிஆர் தாங்க அவர் வாழ்க்கைக்கு எல்லாமே.

அந்த செயின் தொப்புள் கீழ தொங்கும். எங்கேயோ சுனாமி அடிச்சு நார்த் இந்தியால இருந்து விவேக் ஓபராய் வந்து தேவநாதம்பட்டிங்குற ஊர்ல மக்களுக்கெல்லாம் போய் உதவி பண்றாரு. குடிசை கட்டி தரேன்னு அவரு சொன்னதை கேள்விப்பட்டதுமே சிலிர்த்து எழுறான் மயில்சாமி. அடுத்த நாள் காசு கிடையாது, படம் கிடையாது, வறுமை. சீரடி சாய்பாபா மாதிரி ஒரு நாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான். அவன் பிச்சைக்காரன் ஆகுறது யாரால தெரியுமா, அவனாலேயே.

Actor Vivek about Mayilsamy throwback video emotional

Images are subject to © copyright to their respective owners.

ஒரு நாள் பத்தாயிரம் வரும் அதுக்குள்ள எல்லாருக்குமே குடுத்துட்டு அடுத்த நாள் கம்ப்ளீட்டா ஜீரோவா இருப்பான். அதுதான் மயில்சாமி. இவன் நேரா தேவநாதம்பட்டி போய் விவேக் ஓபராயை பாக்குறான். இவனுக்கு இங்கிலீஷ் தெரியாது, இவன்கிட்ட இங்கிலீஷ் பேசினாலும் அவனுக்கு அப்புறம் இங்கிலீஷ் வராது. ஆனா கில்லாடிங்க, படிப்பறிவு இல்லாம எம்ஜிஆர் என்ற ஒரு விஷயத்தை வைத்து இவ்வளவு தூரம் வந்து இருக்கானே. அப்புறம் விவேக் ஓபராயை நேர்ல பார்த்து அவன் கழுத்துல இருந்த பெரிய செயினை அவரு கழுத்துல போட்டுட்டு வந்துட்டான். அந்த எம்ஜிஆர் டாலரை அவர் கிட்ட கொடுத்துட்டு வந்திருக்காங்க, எவ்வளவு பெரிய விஷயம் இது.

உதவி, உதவி, உதவி எப்பவுமே உதவி. தன்னால முடியலன்னா மத்தவங்களுக்கு ராத்திரி 12:00 மணிக்கு போன் பண்ணி தொந்தரவு பண்றது. இந்த மாதிரி சார் ஒரு பையனுக்கு பீஸ் கட்டணும், சத்யராஜ் சார் கிட்ட கேட்டேன், கொஞ்சம் பணம் தரேன்னுட்டாரு. நீங்க கொடுத்தீங்கன்னா நாளைக்கு பையனுக்கு பீஸ் கட்டிருவேன்' ன்னு சொல்லுவான்" என மயில்சாமியின் மனம் குறித்து பாராட்டி விவேக் பேசி இருந்த Throwback வீடியோக்கள், அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | இறப்புக்கு முந்தைய இரவில் இறைவனுக்காக பாடிய மயில்சாமி.. வைரலாகும் கடைசி வீடியோ!!

"நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் THROWBACK வீடியோ!! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vivek about Mayilsamy throwback video emotional

People looking for online information on Mayilsamy, Mayilsamy throwback video, Vivek will find this news story useful.