www.garudabazaar.com
iTechUS

"அண்ணே இந்த Rolls Royce கார்ல பேசிட்டே" 😅 .. வாரிசு படத்தின் BTS வீடியோ.. விஜய், யோகி பாபு Fun!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன.

Yogi babu share bts video in varisu shoot vijay and vivek

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த நானே வருவேன், லவ் டுடே, காஃபி வித் காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலலும் யோகி பாபு நடித்திருந்தார்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திலும் நடித்த யோகி பாபு, நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்த காமெடி காட்சிகள், பெரும் வரவேற்பினையும் திரையரங்குகளில் பெற்று வருகிறது. தொடர்ந்து எக்கச்சக்க தமிழ் படங்களில் நடித்து வரும் யோகி பாபு, இதற்கு அடுத்ததாக பொம்மை நாயகி, காசேதான் கடவுளடா, அந்தகன், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Yogi babu share bts video in varisu shoot vijay and vivek

இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட BTS வீடியோ ஒன்றை யோகி பாபு பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக யோகி பாபு பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், நடிகர் விஜய், யோகி பாபு, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் Golf Cart ஒன்றில் அமர்ந்திருக்கின்றனர். நடிகர் விஜய் இதனை ஓட்ட, செல்ஃபி வீடியோ எடுக்கப்படுகிறது. அப்போது, அனைவரும் கேமராவில் தெரிவதையும் விஜய் உறுதி செய்யும் படி கூற, பின்னால் இருக்கும் யோகி பாபு, "அண்ணே Rolls Royce இருக்குல்ல, அதுலயும் பேசிட்டே போலாமாண்ணே" என கேட்டதும் எதுவும் பேசாமல் சிரிக்கவும் செய்கிறார் விஜய்.

Yogi babu share bts video in varisu shoot vijay and vivek

முன்னதாக, பீஸ்ட் படப்பிடிப்பின் போது தனது Rolls Royce காரில் படக்குழுவினரை நடிகர் விஜய் அழைத்து சென்றிருந்தது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடதக்கது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Yogi babu share bts video in varisu shoot vijay and vivek

People looking for online information on BTS Video, Varisu, Vijay, Yogi Babu will find this news story useful.