www.garudabazaar.com

பிரபல தென்னிந்திய சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்..? - அவரே சொன்ன மாஸ் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மோகன்லால் கேரளாவில் முதன்மை நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மற்றும் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் மோகன்லால் தமிழில் இருவர், ஜில்லா, உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அண்மைக் காலங்களில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் முதல் பாகம், இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் திரைப்படங்களில் நடித்து நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் பெருவெற்றி பெற்றன.

Actor Arjun Sarja reveals his plans to direct Mohanlal

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விஜய் மக்கள் இயக்கம் எப்போ அரசியல் கட்சியாக மாறும்?".. பிரபல கோயிலில் S.A.C அளித்த பதில்!

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் மோகன்லால் இயக்க விரும்புவதாக திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள விஷயம் வைரல் ஆகி வருகிறது. நடிகர் அர்ஜுன் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக பிரபலமானார். இதேபோல் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கேசவன், ஜெய்ஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ள அர்ஜூன் தற்போது குணச்சித்திர நடிகராக பல முன்னணி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடித்த மங்காத்தா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அர்ஜூன் தற்போது விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் தன்னுடைய மருமகன் முறையில் உள்ள பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் வெளியாகவுள்ள மார்ட்டின் திரைப்படத்திற்கு அர்ஜூன் கதை எழுதியிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அர்ஜுன் கலந்து கொண்டார். இதில் பேசும்பொழுது மோகன்லாலை வைத்து, தான் ஒரு படம் இயக்குவதற்கு கதையை தயார் செய்து விட்டதாகவும், அதை அவரிடம் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ,மேலும் மோகன்லாலும் தன்னிடம் இதுகுறித்து தொடர்ந்து எப்போது படம் பண்ணலாம் என கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், இந்த படம் உடனடியாக துவங்கப்படவில்லை என்றாலும் கூட குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக மோகன்லால் படத்தை, தான் இயக்குவது என்பது தன்னுடைய விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Actor Arjun Sarja reveals his plans to direct Mohanlal

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே மலையாளத்தில் பிரமாண்ட வரலாற்று படமாக உருவான மரைக்கார்: அரபிக்கடலிண்ட சிம்ஹாம் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் நடிகர் அர்ஜுன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Also Read | "என் பையன் குடும்பத்துக்கும்".. பிரபல சிவன் கோயிலில் பசு பூஜை செய்த விஜய் தந்தை S.A.C..!

Tags : Mohanlal, Arjun

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arjun Sarja reveals his plans to direct Mohanlal

People looking for online information on Arjun, Mohanlal will find this news story useful.