www.garudabazaar.com

“பான் இந்தியா படம்னே ஒன்னு இல்ல”.. மார்டின் படவிழாவில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பேசியது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம்.

Actor Arjun about Pan India Movie in Martin movie meet

Also Read | பிரபல தென்னிந்திய சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்..? - அவரே சொன்ன மாஸ் தகவல்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Actor Arjun about Pan India Movie in Martin movie meet

Images are subject to © copyright to their respective owners.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது.  இவ்விழாவில் வெளியிடப்பட்ட  டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.

Actor Arjun about Pan India Movie in Martin movie meet

Images are subject to © copyright to their respective owners.

இதில் இப்படம் பான் இந்திய படமா என கேட்கப்பட்டது. இதுகுறித்து பதில் அளித்த நடிகர் அர்ஜூன், “பான் இந்தியா படம் என்றே ஒன்று இல்லை. அனைத்துமே படங்கள்தான். படங்கள் எப்படி இருக்கின்றன? அவற்றின் தரம் எப்படி இருக்கிறது? மக்களிடம் எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்பதே விஷயம். ஒரு படம் நன்றாக இருந்தால் அது ஃபயராகி, எல்லா மொழிகளிலும் ஓட ஆரம்பிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Also Read | “ஒரு நேரத்துல பாலிவுட் படங்கள் ஹிட் கொடுக்கலயா..?” - விட்டுக் கொடுக்காமல் பேசிய அர்ஜூன்.!

Tags : Mohanlal, Arjun

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arjun about Pan India Movie in Martin movie meet

People looking for online information on Arjun, Mohanlal will find this news story useful.