www.garudabazaar.com

"தலனு புரிஞ்சுப்பாங்க.. So ரஜினி Songல அத மாத்துனேன்" .. உடைக்கும் பாடலாசிரியர் விவேக் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் பாடலாசிரியர் விவேக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Petta Song Lyrics was changed due to Viswasam says lyricist Vivek

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வாரிசு படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Petta Song Lyrics was changed due to Viswasam says lyricist Vivek

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஸவாசம் படத்துடன் ரிலீஸ் ஆன பேட்ட படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வரிகள் எப்படி மாற்றப்பட்டது குறித்து விவேக் பேசியுள்ளார். அதில், "ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் வரும் பேட்ட பராக் பாடலில், "கொஞ்சம் ஒதுங்கிரு.. ஓடி பதுங்கிரு வர்றது தலைவர் பேட்ட பராக்" பாடலில் "கொஞ்சம் ஒதுங்கிரு.. தல வணங்கிடு வர்றது தலைவர் பேட்ட பராக்" என்றுதான் முதலில் இருந்தது.

Petta Song Lyrics was changed due to Viswasam says lyricist Vivek

ஆனால் அது ரஜினியின் என்ட்ரி பாடல். ரஜினி வரும்போது "தல வணங்கிடு" என்கிற வார்த்தை இருந்தால் அது ரசிகர்களால் அப்போது "தல" என்று (இப்போது நடிகர் அஜித் கேட்டுக்கொண்டபடி ஏகே, அஜித்) அன்புடன் அழைக்கப்பட்டு கொண்டு இருந்த நடிகர் அஜித்தை குறிப்பதாக பொருள்பட்டுவிடும் என்று சிந்தித்து "தல வணங்கிடு" என்பதற்கு பதிலாக "ஓடி பதுங்கிரு"  என்று மாற்றி அமைத்தேன்.‌" என்று பாடலாசிரியர் விவேக் கூறினார்.

"தலனு புரிஞ்சுப்பாங்க.. SO ரஜினி SONGல அத மாத்துனேன்" .. உடைக்கும் பாடலாசிரியர் விவேக் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Petta Song Lyrics was changed due to Viswasam says lyricist Vivek

People looking for online information on Ajith Kumar, Petta, Rajinikanth, Varisu, Viswasam, Vivek will find this news story useful.