www.garudabazaar.com

Dharavi Bank: வெப் சீரிஸ்க்காக தென்னிந்திய முன்னணி ஹீரோ படத்தை பார்த்த விவேக் ஓபராய்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தாராவி பேங்க்' தொடருக்காக, 'கம்பெனி' படத்தில் மோகன்லால் நடிப்பைப் போல நடிப்பை கொடுக்க முயற்சி செய்துள்ளதாக நடிகர் விவேக் ஆனந்த் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Vivek Oberoi revisited Mohanlal acting in Company for Dharavi Bank

Also Read | அன்பே சிவம், பகவதி பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்.. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!

MX ஒரிஜினல் இணையத்தொடரான 'தாராவி பேங்க்' தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய கதை ஆகும்.  இந்த பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கின்றன. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதியற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள்.

இந்தத் தொடரில் JCP ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவர்தார் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவர் விரும்புவதில்லை, அவருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வார்.

இந்த 'தாராவி பேங்க்' இணையத் தொடருக்கும் தன்னுடைய அறிமுகப் படமான 'கம்பெனி'க்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி விவேக் ஓபராய்நினைவு கூர்ந்துள்ளார். அதில் மும்பை காவல்துறையின் இணை ஆணையரான வீரப்பள்ளி சீனிவாசன் ஐபிஎஸ் என்ற நடிகர் மோகன்லாலின் கதாபாத்திரத்தில் இருந்து 'தாராவி வங்கி'யில் தனது கதாபாத்திரத்திற்கான உத்வேகம் பெற, அந்த படத்தை மீண்டும் பார்வையிட்டதாகவும் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து விவேக் பகிர்ந்திருப்பதாவது, "சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்திருக்கும். 'கம்பெனி' என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவகனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் 'தாராவி பேங்க்' இணையத் தொடரில் நடிப்பதற்காக  வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது". என தெரிவித்துள்ளார்.

Vivek Oberoi revisited Mohanlal acting in Company for Dharavi Bank

மேலும் மோகன்லாலின் நடிப்புக் குறித்து பாராட்டி அவர் மேலும் கூறும்போது, "மோகன்லால் சாருடைய அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் ஃபோர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும். மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவியாக இருந்தது". என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் உள்ள உண்மையான சவால்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்,  அதன்படி, "உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் சார் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்". என தெரிவித்துள்ளார்.

Also Read | “ரச்சிதா க்ரஷ்.. நான் என் girl friend-அ Love பண்றேன்.. பேச ஆரம்பிச்சிட்டேன்” .. ராபர்ட் EXCLUSIVE

Vivek Oberoi revisited Mohanlal acting in Company for Dharavi Bank

People looking for online information on Company, Dharavi Bank, Vivek Oberoi Mohanlal will find this news story useful.