மனதை உலுக்கிய நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம்... தளபதி விஜய்யின் பாடலுக்கு செய்த டிக்டாக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமா உலகில் பல துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் அடுத்தடுத்த மரணிக்கும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அப்படி ஒரு செய்தி தற்போது திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாஸ்டர் பாடலுக்கு டிக்டாக்Chiranjeevi sarja does tiktok for Thalapathy Vijay master song

பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா  மரணமடைந்த செய்தி அனைவரையும் உலுக்கியுள்ளது. இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு செய்த டிக்டாக் வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் வைரலாக்கி வருகிறனர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாஸ்டர் பாடலுக்கு டிக்டாக்Chiranjeevi sarja does tiktok for Thalapathy Vijay master song

People looking for online information on Chiranjeevi Sarja, Master, Tiktok, Vijay will find this news story useful.