ஊரடங்கில் நடிகர் சூர்யா செய்த சமையல்.... வெளியான புகைப்படம்... செம வைரல் இப்போ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.

ஊரடங்கில் நடிகர் சூர்யா செய்த சமையல் போட்டோ Actor Surya cooking in corona lockdown photo viral

பலரும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது அதிகரித்திருக்கிறது இந்நிலையில் நடிகர் சூர்யா தனது வீட்டில் சமைக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் பொறுப்புடன் சூர்யா சமைத்துக் கொண்டிருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே சூர்யா தனது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உடையவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஊரடங்கில் நடிகர் சூர்யா செய்த சமையல் போட்டோ Actor Surya cooking in corona lockdown photo viral

People looking for online information on Cooking, Corona, Jyothika, Surya will find this news story useful.