‘உன் வருகைக்காக Waiting..!' - பிக் பாஸ் அபிராமியின் புதிய போஸ்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 01:08 PM
பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆடியன்ஸை கவர்ந்தது நட்பும், அதையும் தாண்டி புனிதமான உறவும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் இந்த சீசனில் சாக்ஷி, கவின், லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதலும், நட்பும், முகென் ராவ் மற்றும் அபிராமி இடையிலான நட்பையும் தாண்டிய புனிதமான உறவும் ஹைலைட்டாக அமைந்தது. பிக் பாஸ் வீட்டில் ஷெரின், லாஸ்லியாவிற்கு இணையாக முகென் ராவிடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தார்.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களை வரிசையாக சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது அபிராமி. பிங்க் நிற ட்ரடீஷ்னல் உடையில் பொஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள அவர் "கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு" என்று கூறி பதிவிட்டுள்ளார்.