கேப்டனாகனுமா அப்போ இத பண்ணுங்க - பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 23, 2019 03:49 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்து கமலுடன் மேடையேறிய அவர், '90 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றதே வெற்றி' என்றார்.

மேலும், கவின் பற்றி கூறிய அவர், 'நாங்க ரெண்டு பேரும் தான் இந்த பிக்பாஸ் வீட்டில் அதிகம் நாமினேட் செய்யப்பட்டோம். ஆனாலும் மக்கள் கவினை காப்பாற்றியுள்ளார்கள். என்கிட்ட இல்லாத ஒன்று கவினிடம் இருக்கிறது' என்று கூறிய சேரன், இன்னும் 10 நாட்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறு அறிவுரை கூறினார்.
இந்நிலையில் பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோவை (செப்டம்பர் 23) விஜய் டிவி ஒளிபரப்பியது அதில் கவின், சாண்டி, முகென் மூவரையும் நன்றாக கட்டி உருல விட்டு ஒரு போட்டி வைக்கிறார் பிக்பாஸ். இதில் மூவரும் எழுந்திருக்க முடியாமல் போட்டிக்காக கஷ்டப்பட ஷெரின் மற்றும் லாஸ்லியா கை தட்டி சிரிக்கின்றனர்.
இதில் யார் வெற்றிப்பெற்று இந்த வாரம் வீட்டின் தலைவர் பதவியை ஏற்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேப்டனாகனுமா அப்போ இத பண்ணுங்க - பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ