உங்களில் ஒருவனாய் ஏற்றதில் மகிழ்ச்சி - பிக் பாஸ் Eviction-க்கு பின் சேரப்பா சொன்னது இதான்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 24, 2019 03:56 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு கடுமையான பிசிக்கல் டாஸ்குகள் கொடுக்கப்பட்டன.

கடந்த வார எபிசோடில் எவிக்ஷன் நடைபெற்றது. எவிக்ஷனில் நாமினேட் ஆகியிருந்த வலுவான போட்டியாளர்களான கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன் ஆகியோரில் யாரும் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் சேரன் எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் சேரன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்தை மக்களுக்கு நன்றி சொல்லி தெரிவித்துள்ளார்.
இதில் ‘தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என்று டுவிட் செய்துள்ளார்.
தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி. pic.twitter.com/5pto6roNHd
— Cheran (@directorcheran) September 24, 2019