வந்தாங்க போய்ட்டாங்க... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில்  கடந்த  வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா நாமினேட் ஆன நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss 3 Tamil Kamal Haasan Vanitha Evicted Hotstar Vijay tv

வனிதா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது முறையாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிகழ்ச்சியின்போது, வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்த பிறகு அவர் மற்ற போட்டியாளர்களிடம் விடை பெற்று வெளியே வந்தார்.

அப்போது கவினிடம் பேசிய அவர் "இனிமேலாவது மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இல்லாமல் இரு என்று கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நிகழ்ச்சிகளில் இல்லாததுபோல் வெளியேறிய ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது இல்லை. ஆனால் முதல்முறையாக அந்த வாய்ப்பை பெற்றவர் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது