“Bag பிடிச்சு இழுத்தா..” - கோபத்தில் கொந்தளித்த தர்ஷன்! கவினுக்காக பரிந்து பேசிய லாஸ்லியா Video இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 18, 2019 12:24 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 86 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலம் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், விவாதம், நட்பு, காதல், மோதல் என ஆரம்பத்தில் இருந்து எமோஷனலாகவே நாட்கள் நகர்ந்த நிலையில், இறுதிக்கட்டம் நெருங்கியிருக்கும் வேளையில், ஃபிசிக்கல் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் இந்த வாரம் கொடுத்திருக்கிறார். இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் ஃபிசிக்கல் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடுபவர் நேரடியாக பிக் பாஸின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்.
இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கவின் செய்த வேலையால் தர்ஷன் கடுப்பாகி கோபமாகிறார். இருவருக்கும் மோதல் வந்துள்ளது.
“BAG பிடிச்சு இழுத்தா..” - கோபத்தில் கொந்தளித்த தர்ஷன்! கவினுக்காக பரிந்து பேசிய லாஸ்லியா VIDEO இதோ வீடியோ