‘என்னது சாண்டி Strategy வச்சு விளையாடுறாரா..?’ - இப்படி சொல்லிட்டீங்களே கவின்! ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 20, 2019 01:01 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கிற்காக கடுமையான டாஸ்குகளை விளையாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி விரைவில் நிறைவுபெறவுள்ள நிலையில், இந்த வாரம் டாஸ்கை மையமாகக் கொண்டு போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்த கவின் மற்றும் சாண்டி இடையே தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது புரொமோ வீடியோவில், பாஸ் வீட்டில் வெளியே அமர்ந்து மழையை ரசித்தவண்ணம் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். கவினும் லொஸ்லியாவும் ஒன்றாக இருக்க சாண்டி கொடையை எடுத்து அவர்கள் முன்னர் வைக்கிறார். அதற்கு லொஸ்லியா சாண்டி உன்னை பற்றி ஒன்னு நினைச்சேன் அதை நீங்க உறுதி செஞ்சிட்டிங்க என சொல்லும் விறுவிறுப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
‘என்னது சாண்டி STRATEGY வச்சு விளையாடுறாரா..?’ - இப்படி சொல்லிட்டீங்களே கவின்! ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ