தல அஜித் வீட்டிலேயே டப்பிங் தியேட்டரா? - உண்மை இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 26, 2019 12:56 PM
நடிகர் அஜித் தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாகவே தனது திரைப்படங்களின் புரொமோஷன் உட்பட எந்த விழாக்களுக்கும் செல்வதை தவிர்ப்பவர். ஷூட்டிங் பணிகளுக்கு செல்லும் போது மட்டுமே நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் பார்க்க முடியும்.
இந்நிலையில், டப்பிங் பணிகளுக்காக வெளியே இருக்கும் டப்பிங் ஸ்டூடியோக்களுக்கு செல்லும் போது ரசிகர்கள் ஒன்றுக் கூடி புகைப்படங்கள் எடுப்பதால், அதனை தவிர்க்கும் விதமாக நடிகர் அஜித் தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இது குறித்து தகவறிந்த போது, இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் ‘தல 60’ திரைப்படம் உருவாகி வருகிறது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.