பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கவினை ஓங்கி அறைந்த அவரது நண்பர் - ப்ரோமோ VIDEO இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(செப்டம்பர் 12) விஜய் டிவியில் ஒளிபரப்பான முதல் புரோமோவில் கவின் நண்பர் ஒருவர் உள்ளே வந்துள்ளார்.

Bigg Boss 3 Tamil Promo 1 Kavin Losliya Vijay Tv Hotstar

கவினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரதீப் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு கவினை பார்க்க வருகிறார். வந்தவுடன் கவினுக்கு அறிவுரை எல்லாம் கூறாமல், கவின் கேவலமாக கேம் ஆடியதாகவும், இங்குள்ளவர்களை மட்டுமின்றி வெளியில் உள்ளவர்களின் மனம் புண்படும்படி நடந்ததாலும் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.

பின்னர் ஒருவேளை நீ பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் அதே மேடையில் என்னை கூப்பிட்டு திருப்பி அடிச்சிகோ என்றும் கூறினார். நண்பரின் இந்த எதிர்பாராத செயலால் கவின் அதிர்ச்சி அடைந்தார். கவினை விட தன்னால் தான் கவினுக்கு இந்த நிலை என எண்ணி லாஸ்லிய அதிர்ச்சியில் உறைந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கவினை ஓங்கி அறைந்த அவரது நண்பர் - ப்ரோமோ VIDEO இதோ! வீடியோ