இன்று காப்பாற்றப்பட்டவர் இவர்தான்!! -பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 22, 2019 02:53 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேஷனுக்கு சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகினர். இவர்களில் காப்பாற்றப்படும் போட்டியாளர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோவில் கமல் ஒரு கேள்வியை மக்களிடம் வைத்தார். இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்க, மக்கள் அனைவரும் ஒரு மனதாக ஷெரீன் என்று கத்தினர். இதை தொடர்ந்து ஷெரீன் காப்பற்றப்பட்டதாக கமல் அறிவித்தார், அதற்கு ஷெரீனும் நன்றி தெரிவித்தார்.
இன்று காப்பாற்றப்பட்டவர் இவர்தான்!! -பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ
Tags : Kamal Haasan, Losliya, Sherin, Kavin, Cheran, Bigg Boss Tamil 3