ராசியான நாற்காலி.. உட்கார்ந்தால் கண்டிப்பா வெற்றிதான்.. மோடி அமர காத்திருந்த பாஜக தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 08, 2019 07:49 PM
தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் மோடி, அமரவேண்டும் என கான்பூர் பாஜக உறுப்பினர்கள் ராசியான நாற்காலியுடன் காத்திருந்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஒரு மர நாற்காலியை பாஜக நிர்வாகிகள் கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அப்படி என்ன இந்த நாற்காலிக்கு இவ்வளவு சிறப்பம்சம் என அவர்களே தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு முதன் முதலாக கான்பூரில் உள்ள இந்திரா நகர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி அமர்ந்துள்ளார். மீண்டும் 2 -வது முறையாக 2014 -ம் ஆண்டு கோயலா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி அமர்ந்துள்ளார். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மோடி பிரதமரானார்.
இதனைத் தொடர்ந்து 2017 -ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்த பொதுக்கூட்டத்திலும் மோடி இதே நாற்காலியில் அமர்ந்துள்ளார். அந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று வளர்ச்சித் திட்ட பணிகளைத் தொடங்கி வைக்க கான்பூருக்கு பிரதமர் மோடி வரயிருக்கிறார். அதனால் மீண்டும் இந்த ராசியான நாற்காலியில் மோடி அமர்வாரென பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.