‘ஹோம் மேட்ச் டிக்கெட் தொகை..’ புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு..CSK அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 21, 2019 10:32 AM

2019- ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

CSK donates proceeds of first ipl home match to crpf martyrs family

அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிற அந்த ஹோம் மேட்சைக் காண்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளைப் பெறும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வீரர்கள் பயிற்சி பெற்றபோது, தல தோனியைக் காண  ரசிகர் ஒருவர் ஓடிவந்ததும், அவரிடம் தோனி ஓடிப் பிடித்து விளையாடியதும் வைரலாகியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி கேப்டன்ஷிப்பில் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளதால், அந்த அணிக்கு சென்னை மற்றும் உள் தமிழகத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மெச்சிக்கொள்ளும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நாளும் ஒரு அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும் முதல் ஹோம் மேட்சில் விற்பனையாகும் டிக்கெட்டுகளுக்கான கணிசமான தொகை, புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய துணைநிலை ராணுவ வீரர்களின் நினைவால் வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ளதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை, அந்த அணியின் நிர்வாகத் தலைவர் ராகேஷ் சிங் கூறியுள்ளார். அதோடு, டிக்கெட் விற்பனை தொடங்கிய முதல் நாளே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் மேட்ச்சுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தொகையானது இந்திய தலைமை ராணுவ தளபதியிடம் தல தோனி மூலம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.