அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி அறிவிப்பு..! தேமுதிக -வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 11, 2019 10:24 AM

அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது.

DMDK ties up with AIADMK alliance

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான கால அட்டவணையை நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதில் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 2ம் கட்டமாக ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பரபரப்பான தேர்தல் களத்தில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக -வும் திமுக -வும்  தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதேபோல், திமுக -வுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

ஆனால் தேமுதிக தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை உறுதி செய்யாமல் இருந்தது. முதலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இணையப்போவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் திமுக -வுடன் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதனை அடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா துரைமுருகனின் கருத்தை கடுமையாக விமர்சித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதனை அடுத்து இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதில், வரயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக -வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. மேலும், 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக -வுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Tags : #ADMK #DMDK #LOKSABHAELECTION2019