மூச்சு விட திணறிய இளவரசர்.. ‘ஏப்ரல் மாதமே உண்டான கொரோனா’.. இத்தனை நாள் ரகசியமா வெச்சிருந்ததுக்கு இதுதான் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரித்தானிய இளவரசர் வில்லியம் (38), கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுவிடவே திணறும் நிலைக்கு சென்றதாகவும், அப்போது அவரது அரச குடும்பத்தார் பதறிப்போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே, வில்லியமுக்கு கொரோனா தொற்று உண்டான நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், வில்லியமுடைய தந்தை இளவரசர் சார்லசுக்கும் கொரோனா தொற்றிய செய்தி வெளிவந்தது.
இத்தகைய சூழலில் தனக்கும் கொரோனா இருப்பதை வெளியில் சொல்லி மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகதான் வில்லியம் தனக்கு கொரோனா உண்டான விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொண்டாதாக தற்போது கூறப்பட்டுள்ளது.
இதுபறி பேசிய அவர், தனக்கு கொரோனா என்கிற விஷயத்தை விடவும், நாட்டில் மிக முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும், கூறிய வில்லியம் தனக்கு தொற்றிய பின், கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் தொற்ற வாய்ப்புண்டு என்கிற உண்மையை நன்றாக புரிந்து கொண்டதாகவே தெரிவிக்கிறார்.
எனவே இந்த இரண்டாம் நிலை ஊரடங்கை, நாம் அனைவரும் சீரியஸாக எடுத்துக் கொள்வது எந்த அளவுக்கு அவசியம் என்பதை, தான் புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
