இந்த தீபாவளிக்கு ‘பட்டாசு’ வெடிக்கக் கூடாது.. ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை சீரடையாத சூழலில், தீபாவளி பண்டிகையை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடுவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் ராஜஸ்தான் மாநில அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதில் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.
அதன்படி பட்டாசுகள் விற்பனை செய்யவும் மற்றும் வெடிக்கவும் தடை விதிக்க அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ‘வரும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்யுங்கள். முடிந்தவரை சுகாதாரமான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்’ என அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
