'என்ன பசங்களா... லாக்டவுன் நல்லா இருந்துச்சா?.. ஸ்கூல், காலேஜுக்கு போவோமா?'.. 'காலேஜ் திறந்ததும்... தியேட்டரும் திறக்கணும்ல!?'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:-
* 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது
* பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது
* தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது
* திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும்
* வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கை விதி பொருந்தும்.
* கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு நவம்பர் 2-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது
* காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்
* அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
* நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் மறு அனுமதி வரும் வரை திறக்கப்படாது.

மற்ற செய்திகள்
