'பாகிஸ்தானில் போய் விளையாடு'...'கொடூரமாக தாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்'...பதைபதைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 23, 2019 12:33 PM
கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய சிறுவர்களை கடுமையாக தாக்கிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சாஜித் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமாஷ்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.ஹோலி பண்டிகை தினத்தன்று சாஜித்தின் குழந்தைகள் அருகில் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்களுக்கும் மற்றோரு குழுவை சேர்ந்த சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பகுதிக்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து 'இங்க என்ன பண்றீங்க,போய் பாகிஸ்தானில் விளையாட வேண்டியது தானே' என கூறி தகாத வார்த்தைகளால் அந்த சிறுவர்களை வசைபாடியுள்ளனர்.
இதனை கவனித்த அந்த சிறுவர்களின் உறவினர்,ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என அந்த நபர்களிடம் கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவன்,சிறுவர்களின் உறவினர் கன்னத்தில் அறைந்துள்ளான்.இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த மர்ம நபர்கள்,சிறிது நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் 6 பேரை அழைத்து கொண்டு அங்கு வந்துள்ளார்கள்.
இதனைக் கண்ட சிறுவர்களின் உறவினர்கள் அங்கிருந்து தப்ப முயற்சிக்க,6 பேர் கொண்ட கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது.இதில் சிறுவனின் தந்தை சாஜித் உட்பட அவரது உறவினர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.அதோடு அங்கிருந்த கார்,அவரது பொருட்கள் மற்றும் வீட்டையும் சேதப்படுத்தினர்.இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட,அவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என,காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை குடும்ப உறுப்பினர்கள் சிலர் படம்பிடித்துள்ளனர்.அந்த விடியோவானது தற்போது இந்திய அளவில் கடும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
Muslim family mob lynched in Bondsi Village, Gurgaon Haryana. Is it Democracy? Attack on each minority by Majority is attack on Constitution. We should be ashamed of it...#MobLynching pic.twitter.com/ZPC2BRVscl
— Prashant Kanojia (@PJkanojia) March 22, 2019