தலயா? தளபதியா?.. ‘சென்னை வந்த கோலியின் படை’.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 21, 2019 08:22 PM
கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சென்னை வந்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதியிலிருந்து கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடக்கப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ள. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் விளையாடுவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் மற்ற வீரர்கள் சென்னை வந்தனர். அதன்பின்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி ஆட்டத்தைக் காண சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் கூடினர்.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று சென்னை வந்துள்ளது.
Off to Chennai ✈✈ #teamrcb #ipl pic.twitter.com/Ule0QI3Igj
— Virat Kohli (@imVkohli) March 21, 2019
