பிரியங்கா காந்தியை ‘பப்பி’ என்று சொன்னதால், சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | Mar 19, 2019 05:21 PM
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா. இவர் காங்கிரஸின் பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக கட்சியினர் ‘பப்பு’ என கிண்டலாக கூறி வந்த நிலையில் தற்போது அந்த கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது பிரியங்கா காந்தியை ‘பப்பி’ எனக் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரியங்கா காந்தியை அவர் தேசத்தின் மகள் அல்ல, காங்கிரஸ் கட்சியின் மகள், அவர் எதிர்காலத்தில் அரசியலில் காணாமல் போய்விடுவார் என்று மகேஷ் சர்மா தெரிவித்தார்.
இவர் குமாரசாமி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரையும் அவர் சரமாரியாக தாக்கி பேசினார். ‘இதுபோல் சர்ச்சை பேச்சுகளை பேசுவது அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல’ என்பது குறிப்பிடத்தக்கது.
