முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 19, 2019 05:05 PM

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி வைத்து, நிற்கவிருப்பதாக முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

candidate list for lok sabha election 2019, Kamals MNM Tweet

இந்நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற ஏப்ரம் 18, 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று (20-03-2019, புதன் கிழமை) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார்.

2019 - நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான 1-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல், நமக்கான அரசியல், நமக்கான கட்சி என்கிற உயரிய நோக்கத்துடன் தன்னால் முன்னெடுக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டி, வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்துவதாக குறிப்பிட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆனால் கமல் நிற்கிறாரா இல்லையா? அப்படி நின்றால் எந்த தொகுதியில் நிற்கிறார் என்பன போன்ற விபரங்களையும், 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் குறித்த தகவல்களையும் மார்ச் 24-ஆம் தேதிதான் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த 1-ஆம் வேட்பாளர் பட்டியலைக் கீழே காணலாம்.