‘வேர்ல்ட் கப் ஜெயிச்ச அந்த தருணம்’..‘அதே ராஜநடை’..தெரிஞ்சா நீங்க லக்கிதான்.. யாருபா அது?.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 02, 2019 09:14 PM
உலகக் கோப்பை வென்ற தருணம் பெருமையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 -ஆம் ஆண்டு இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. முதன் முதலாக 1983 -ஆம் ஆண்டு முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 28 வருடங்கள் கழித்து இந்தியா உலகக் கோப்பையை வென்றதால் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேலும் ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த போட்டியில் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்காக மும்பையில் உள்ள வான்காடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உலகக் கோப்பையை வென்ற தருணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,‘இந்த மைதானத்தில் தான் நாங்கள் உலகக் கோப்பையை வென்றோம். அந்த தருணம் பெருமையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது. இந்த நாள் எனது மனதுக்கு நெருக்காமாகவும், எப்பொழுதும் நினைத்துப் பார்க்ககூடிய ஒன்றாக இருக்கும்’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அப்போது தோனி செல்வதைப் பார்த்து, ‘இந்த கேமராவில் இவர் தெரிந்தால் நீங்கள் லக்கியான ஆள்’ என ஹர்பஜன் சிங் கூறினார்.
Bhajju pa on being back to the very same place on the World Cup Anniversary with #Thala himself! #WhistlePodu #Yellove #8YearsLater 🦁💛 pic.twitter.com/mQVQbtpGth
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2019