‘தல’ தோனியை அடுத்து.. ‘கிங்’கோலி படைத்த புதிய சாதனை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 02, 2019 10:14 PM

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Virat Kohli reaches a massive milestone in IPL history

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 14 -வது போட்டி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்  அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் பெங்களூர் அணியில் காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டனாக 100 -வது போட்டியில் அடியெடுத்து வைத்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்து சாதனை படைத்த தோனி, கவுதம் காம்பீர் ஆகியோரின் வரிசையில் மூன்றாவது இடத்தை கோலி பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் பார்தீவ் பட்டேல் ஆகியோர் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் கோலி 23 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதனை அடுத்து நிதானமாக ஆடிய பார்தீவ் பட்டேல் 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #RCBVSRR #VIVOIPL #PLAYBOLD