"அவர் திரும்ப வருவார்னு தெரியும்! அதுனால தான் அவர் T20-ல பெரிய ப்ளேயரா இருக்காரு" - தினேஷ் கார்த்திக் பாராட்டிய சன் ரைசர்ஸ் வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ: மூத்த இந்திய விக்கெட் கீப்பர் - பேட்டர் தினேஷ் கார்த்திக், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 சர்வதேச தொடரின் முதல் டி 20 ஐ, இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் அபாரமான செயல்பாட்டிற்காக பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
![Dinesh Karthik talks about Bhuvaneshwar Kumar Bowling performance Dinesh Karthik talks about Bhuvaneshwar Kumar Bowling performance](http://tamil.behindwoods.com/news-shots/images/sports-news/dinesh-karthik-talks-about-bhuvaneshwar-kumar-bowling-performance.jpg)
புவனேஷ்வர் குமார் இலங்கைக்கு எதிரான முதல் டி20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஆடிய இன்னிங்ஸின் முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்காவை டக்கில் வெளியேற்றினார், பின்னர் தனது இரண்டாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷாராவை ஆட்டமிழக்கச் செய்தார். ஒட்டுமொத்தமாக அந்த போட்டியில் 2 ஓவர்களில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். “பவுலிங்கில் நான் விரும்பிய விஷயம், பவர்பிளேயில் ஹர்ஷல் படேல் பந்து வீசுவதைப் பார்ப்பது தான். வெங்கடேஷ் ஐயர் தனது முதல் ஓவரை நன்றாக வீசினார். ஜடேஜா நன்றாக விளையாடினார், சாஹல் தனது ஸ்பெல்லில் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார்.
“கொஞ்சம் ஸ்விங் இருந்தால், புவனேஷ்வர் குமார் ஒரு மாஸ்டராக இருப்பதை பார்க்கலாம். அவர் தென்னாப்பிரிக்காவில் ஒரு மோசமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், ஆனால் அவர் இந்தியா திரும்பி வந்து இந்த டி20 வடிவத்தில் அவர் ஏன் உயர்வாக மதிப்பிடப்பட்டார் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளார்" என தினேஶ் கார்த்திக் கூறியுள்ளார்.
மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பேசும்போது, இந்தியாவின் நீண்டகால திட்டத்தில் நிலைத்திருக்க அவர் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தினேஷ் கார்த்திக் கூறினார்.
“கோவிட் மற்றும் பிற பிரச்சினைகளால், ஷ்ரேயாஸ் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் 3,4,5 என்ற எந்த நிலையிலும் பேட் செய்யும் வாய்ப்பைப் பெறலாம். எனவே அவருக்கு மிக முக்கியமான விஷயம், இந்திய அணியில் நிரந்தரமாக இருக்க போதுமான ரன்களை அடிப்பது தான், அதைத்தான் அவர் செய்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டார்" என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு பேட்டிங் செய்ய வந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆக்ரோஷமாக விளையாடினார். அவர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார் மற்றும் அவர் 203.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டிங் செய்தார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)