அப்படி போடு.. இவர்தான் KKR-க்கு புது கேப்டனா..! வேறலெவலில் வெளியான அறிவிப்பு.. அப்போ இனி ஆட்டம் கலைகட்டுமே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15-வது சீசனுக்கான ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தன.
இதில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவர் முன்பு டெல்லி கேப்பிடல் அணியின் சார்பாக விளையாடி வந்தார். அந்த அணிக்கு கேப்டனாக இரண்டு ஆண்டுகள் செயல்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டுஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி, ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி வரை சென்றது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்தது. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகிய 4 நான்கு வீரர்களை தக்க வைத்தது. கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடிய இயான் மோர்கனை அந்த அணி தக்க வைக்கவில்லை. அதனால் அந்த அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்பட உள்ளனர் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கொல்கத்தா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.