Valimai BNS

கிச்சன் வரை பாதிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர்.. இல்லத்தரசிகளுக்கு புதிய தலைவலியா?.. உயருது "முக்கிய" எண்ணெய் விலை

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 25, 2022 04:32 PM

ரஷ்யா பல ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து இரு பகுதிகளைக் கைப்பற்றியதை அடுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம், பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது.ஆண்டுதோறும் இந்தியாவில் 35 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா 20 சதவிகித பங்கு வகிக்கும் நிலையில், உக்ரைன் உலகிலேயே அதிகபட்சமாக 70 சதவிகித பங்கு வகிக்கிறது.

Ukraine Rising sunflower oil prices due to Russian war

இதன்மூலம், உலகின் மொத்த சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமே 90 விழுக்காடு, இடம் வகிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியாவின் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் உக்ரைனிடம் வாங்கியது 65 விழுக்காடாக இருந்தது.  மொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்து 9 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மூலம், சுத்திகரிப்பு நிறுவனம் 40 முதல் 45 நாட்களுக்கு விற்பனைக்குத் தேவையான இருப்பை வைத்திருக்கும்.

Ukraine Rising sunflower oil prices due to Russian war

எனவே, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரால் அடுத்த சில வாரங்களுக்கு இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் இருப்பில் பிரச்னை எழ வாய்ப்பில்லை.  எனினும், போர் நீடிக்கும் நாட்கள், ரஷ்யா, உக்ரைனில் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல்களைப் பொருத்து இந்தியாவின் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத்தொடர்ந்து, சூரிய காந்தி எண்ணெய் விற்பனை விலை உயர வாய்ப்புள்ளது.  அதே நேரம், உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கோதுமைக்கு மற்ற நாடுகளின் தேவை அதிகரித்துள்ளதால், கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தியாவில் உள்ள சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் குடும்பத் தலைவிகளுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உக்ரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில்,, ரஷ்யா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படும். இதனால் சூரியகாந்தி விதை எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் விலை உயரும். உலகின் டாப் 5 பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகிக்கிறது.  போரினால் பார்லி ஏற்றுமதி கட்டாயம் பாதிக்கும். இதனால் பார்லி விலை உயர்வது மட்டும் அல்லாமல் விநியோகம் குறைந்து அதிகப்படியான தட்டுப்பாடும் நிலவும்.

Ukraine Rising sunflower oil prices due to Russian war

உலகளவில் உலோகத்தை உலகின் மிகப்பெரிய பல்லேடியம் உலோகத்தின் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது. வாகனத்தின் எக்சாஸ்ட் அமைப்புகள் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான உலோகமான பல்லேடியத்தின் விலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

Tags : #SUN FLOWER OIL #UKRAINE #RUSSIA #WAR #INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ukraine Rising sunflower oil prices due to Russian war | India News.