இந்தியா VS இலங்கை கிரிக்கெட்.. கால அட்டவணையை மாற்றிய BCCI..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 15, 2022 07:50 PM

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ. இன்று அறிவித்து உள்ளது.

India vs Sri Lanka Cricket series rescheduled : BCCI

'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டிகள்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் உடனான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்குப் பிறகு இந்திய அணி  இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

அட்டவணையில் மாற்றம்

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணையின்படி  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது, வருகிற 24ந்தேதி (வியாழக் கிழமை) தொடங்கி நடைபெறும்.  இதனை தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.  டி20 போட்டிகளில் முதல் போட்டி லக்னோவிலும், அடுத்த 2 போட்டிகள் தரம்சாலாவிலும் நடைபெறும் என பி.சி.சி.ஐ. தெரிவித்து உள்ளது.

India vs Sri Lanka Cricket series rescheduled : BCCI

அதாவது முதல் டி20 போட்டி லக்னோவில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழக் கிழமை)  நடைபெற இருக்கிறது. இரண்டாவது போட்டி 26 ஆம் தேதியும் (சனிக் கிழமை) மூன்றாவது போட்டி 27 ஆம் தேதியும்  (ஞாயிற்றுக் கிழமை)  நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, முதல் டெஸ்ட் போட்டியானது, மொகாலியில் வரும் மார்ச் 4ந்தேதி (வெள்ளிக் கிழமை) தொடங்கி 8ந்தேதி வரை நடைபெறும்.  2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் மார்ச் 12ந்தேதி (சனிக் கிழமை) தொடங்கி 16ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.

பழைய அட்டவணை

இதற்கு முன்பு, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

"வீட்டில் கரண்ட் கட்" என புகாரளித்த நபர்.. 234 லட்சம் கோடியை இழப்பீடாக கொடுத்த மின்வாரியம்.. என்னதான் நடந்தது?

Tags : #INDIA VS SRI LANKA #CRICKET SERIES #RESCHEDULED #BCCI #இந்தியா VS இலங்கை கிரிக்கெட் #கால அட்டவணையை மாற்றிய BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India vs Sri Lanka Cricket series rescheduled : BCCI | Sports News.