"இவரை கொஞ்சம் கண்டுபிடிச்சு தாங்கப்பா".. ஆனந்த் மஹிந்திராவை நெகிழ்ச்சியடைய வைத்த நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 15, 2022 06:17 PM

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும்  இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவை ஒருவரின் அசத்தல் கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Industry tycoon Anand Mahindra tweets to find a person

புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் குறித்த செய்திகளை தெரிந்துகொண்டால் உடனடியாக தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி தீர்த்து விடுவார் ஆனந்த் மஹிந்திரா. அதேபோன்று புதுமையான கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் மற்றும் உதவிகளையும் ஆனந்த் மஹிந்திரா செய்து வருகிறார். அண்மையில் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதனை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அந்த வகையில், நபர் ஒருவர் தாந்து சாதா சைக்கிளை சில நிமிடங்களில் மின்சார சைக்கிளாக மாறும் அசத்தல் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் துருவ் வித்யூத் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் குர்சவுரப் சிங் உருவாக்கிய அற்புதமான சைக்கிள் பற்றிய வீடியோ வெளியானது.  துருவ் வித்யுத் எலக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் (DVECK) என்ற கருவியை பயன்படுத்தி சாதா சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றி காட்டியுள்ள குர்சௌரப் சிங் என்பவரை ஆனந்த் மஹிந்திரா பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சைக்கிள் 170 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு வலிமையானது.  ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வரை இந்த சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடியும்.  நெருப்பு மற்றும் தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில், குர்சௌரப் சிங்கின் அற்புதமான கண்டுபிடிப்பை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், "இது கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மோட்டார் மூலம் சைக்கிளை இயக்கும் முதல் கருவி இது இல்லை என்றாலும், ஒரு சிறந்த வடிவமைப்பு-கச்சிதமான, திறமையான கண்டுபிடிப்பு. சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடுகிறது. செல்போன் போல 20 நிமிடம் சார்ஜ் செய்தாலே 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோ குறித்து குறிப்பிட்ட அவர்,  "நான் மிகவும் பாராட்டுவதற்கு காரணம் என்னவென்றால், கடினமாக உழைக்கும் மக்களுக்கான அவரது கண்டுபிடிப்போடு மிகுந்த உதவிக்கரமாக இருக்கும். மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தும் அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் இந்த எலெக்ட்ரிக் வாகன புரட்சி மிக முக்கியமானவை.  இது வணிக ரீதியாக வெற்றி பெற்று, கணிசமான லாபம் ஈட்டுவது தவிர்க்க முடியாதது.  ஒரு முதலீட்டாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். யாராவது என்னை குர்சௌரப்பை தொடர்பு கொள்ள உதவினால் நன்ற" என பதிவிட்டுள்ளார்.

Tags : #ANAND MAHINDRA #TWEET #GURZAURABH SINGH #VIRAL VIDEO #INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Industry tycoon Anand Mahindra tweets to find a person | India News.