‘சர்ச்சையை கிளப்பியவருடன் சக்கப்போடு போட்ட ஹர்திக் பாண்ட்யா’ .. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 11, 2019 12:44 PM

ஹர்திக் பாண்ட்யாவும், பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரும் ஆகாஷ் அம்பானியின் திருமண விழாவில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Pandya and Karan Johar dance together at Akash Ambani’s wedding

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் குறித்த சர்ச்சைக்குறிய கருத்தை பாண்ட்யா தெரிவித்ததாக அவர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனால் அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடரில் இருந்து பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும் நீக்கப்பட்டனர். இதனை அடுத்து நடந்த நியூஸிலாந்து எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பாண்ட்யா தன் மீது விழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முகேஷ் அம்பானி-நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதில் திரைப்பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவும், கரண் ஜோகரும் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #HARDIKPANDYA #KARANJOHAR #AMBANIWEDDING #VIRALVIDEOS