ஐபிஎல் 2023 : ஜடேஜா விவகாரத்தில் சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு??.. வெளியான தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிக்கென பிரத்யேக ரசிகர் கூட்டம், உலக அளவில் உள்ளனர்.

Also Read | சென்னை விமான நிலையம் வந்த பயணி.. "15 வருசமா இவரை தேடிட்டு இருக்காங்களாம்".. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு!!
இந்தாண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரை முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா குறித்தும் அதிரடி தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தற்போது காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைத் தொடரிலும் தேர்வாகவில்லை. முன்னதாக, இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தொடருக்கு நடுவே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த சீசனில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத சிஎஸ்கே, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடம் பிடித்து வெளியேறி இருந்தது. தொடர்ந்து, ஜடேஜா மற்றும் சென்னை அணி தொடர்பாக சில தகவல்கள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, ஜடேஜா அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக களமிறங்க மாட்டார் என்றும் சிலர் குறிப்பிட்டு வந்தனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது இது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் பலரையும் குதூகலம் அடைய வைத்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மினி ஏலம் ஒன்றை வரும் டிசம்பர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த ஏலத்திற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் முறையில் டெல்லி உள்ளிட்ட ஒரு சில அணிகள் வாங்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஜடேஜாவை டிரேடிங் முறையில் வேறு அணிக்கு கொடுக்க, சிஎஸ்கே அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த தகவல் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக தான் ஜடேஜா ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | ஒரு காலத்துல 'Employee'..இப்போ பணக்காரர் பட்டியலில் பெயர்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்ச பெண்!!

மற்ற செய்திகள்
