'தவறுதலாக கோடிகளை டிரான்ஸ்பர் செய்த வங்கி'... 'இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்கள் கொடுத்த டிவிஸ்ட்'... 'சிக்கலில் பிரபல நிறுவனம்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்ரெவ்லான் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து அதற்கு கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு தவறுதலாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும் ரெவ்லான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியுள்ள பல நிறுவனங்களும் அதைத் திருப்பிக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், சிட்டி பேங்க் ரெவ்லான் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 1,738 கோடி ரூபாய் பணத்தை அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்களின் கணக்குகளுக்கு தவறுதலாக செலுத்தியுள்ளது.
ஊழியருடைய கவனக்குறைவால் இந்த மிகப்பெரிய பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ரெவ்லான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஆனால், சிட்டி பேங்க் அந்தப் பணம் தவறுதலாக செலுத்தப்பட்டுவிட்டது எனக் கூறி, அதைத் திருப்பித் தரும்படி கோரிக்கை விடுத்தும் அந்த நிறுவனங்கள் அதை ஏற்க மறுத்துள்ளன. இதையடுத்து தங்களுடைய கடனைத் திரும்ப செலுத்தும்படி வங்கிக்கு நாங்கள் அறிவுறுத்தவில்லை என ரெவ்லான் நிறுவனத்தின் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.