'வீட்ட தொறந்தா லட்சக்கணக்குல பணம், நகை...' 'ஆனால் ரோட்ல குப்பை சேகரித்து தெருவிலேயே வாழ்றாங்க...' என்ன காரணம்...? - அதிர்ச்சிக்குள்ளாக்கிய 3 சகோதரிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரத்தில் வாழும் 3 சகோதரிகளுக்கு 2,40,000 ரூபாய் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (60), மற்றும் மகேஸ்வரி என்ற பிரபாவதி (57) ஆகிய மூன்று சகோதரிகளும் சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் மூவரும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் வரும் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று சகோதரிகளில் இளையவரான பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இறந்துள்ளார். சாலையோரத்தில் இருக்கும் அவரின் சடலத்தை தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்தனர்.
அதைனையடுத்து ராஜேஸ்வரி மற்றும் விஜயலக்ஷ்மி வீட்டிற்கு செல்லாமல் சாலை ஓரத்திலேயே தங்கி வந்துள்ளனர். இவர்கள் குறித்து விசாரித்த அப்பகுதி போலீசாரிடம், வீடு இருக்கு ஆனா அங்கே தூங்க முடியாது என கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த போலீசார், இருவரையும் கூட்டிக்கொண்டு அவரது சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் குப்பை மூட்டைகள் இருப்பதை கண்ட போலீசார் அதை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது தான் வீடு முழுவதும் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதையெல்லாம் எண்ணி பார்த்ததில் சுமார் 2,40,000 ரூபாய் கிட்ட இருந்துள்ளது. அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் ரூ.40 ஆயிரம் வரை இருந்துள்ளது. அத்துடன் 7 பவுன் நகைகளும் இருந்தது.
இதைக்குறித்து எந்த புரிதலும் இல்லாத மூதாட்டிகள் அதை பயன்படுத்தாமல் சாலையோரம் உணவிற்காகவும், தங்க இடம் இல்லாமலும் தவித்து வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். காவல்துறையினர் வீட்டை முழுமையாக சுத்தம் செய்த பிறகு பாட்டிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பின், பாட்டிகளுக்கு சொந்தமான நகைகளையும், பணங்களையும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மற்ற செய்திகள்
