இரட்டை சகோதரர்களை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்... "இந்த நிமிஷத்துக்காக தான் காத்து கெடந்தோம்"... மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற சகோதரிகள்... வைரலாகும் இன்ஸ்டா 'பதிவு'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 17, 2020 05:31 PM

அமெரிக்காவை சேர்ந்த பிரிட்டானி மற்றும் பிரையானா டியானி என்ற இரட்டை சகோதரிகள், ஜோஷ் மற்றும் ஜெரிமி சால்யர்ஸ் என்ற இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

identical twin sisters announce they both are pregnant

இந்நிலையில், இரட்டை சகோதரிகளான பிரிட்டானி மற்றும் பிரையானா ஆகியோர், மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தங்களது இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இரண்டு சகோதரிகளும் ஒரே சமயத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இரட்டை சகோதரிகள் இரண்டு பேரும் கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess what!!?? BOTH couples are pregnant! 🤰🤰 We are thrilled and grateful to experience overlapping pregnancies and to share this news with you all! ✨🍀✨🍀✨🍀✨🍀✨ Our children will not only be cousins, but full genetic siblings and quaternary multiples! Can't wait to meet them and for them to meet each other! ✨🍀✨🍀✨🍀✨🍀✨ #SalyersTwins #TwinsMarriedToTwins #expecting #thebump #pregnancyannouncement #pregnancyandbeyond #twinning #dubblebubble #baywatch #babywatch #pregnancyphoto #pregnant #bestpregnancyphotos #maternity #momstobe #dadstobe #twinsisters #twinbrothers #strangethings #identicaltwins #deanetwins #twincouples #twinmoms #twindads #miracle #ourtwinsanewedding #twinwedding #twinpregnancy #pregnancyphotoshoot #dreamcometrue

A post shared by Josh, Jeremy, Brittany, Briana (@salyerstwins) on

identical twin sisters announce they both are pregnant

அன்று முதல் அவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமடைந்தனர். சிறு வயது முதல் இரட்டை சகோதரிகளான பிரிட்டானி மற்றும் பிரையானா, அனைத்து காரியங்களையும் ஒன்றாகவே செய்து வந்த நிலையில், இரட்டை சகோதரர்களையே திருமணம் செய்ய விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது, தாங்கள் ஒரே சமயத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படுவதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளது அவர்களை மேலும் மகிழ்ச்சி கடலில் திளைக்க செய்துள்ளது. அதே போல, பிறக்கும் இரண்டு குழந்தைகளை உடன்பிறப்புகளாக கருதி இரண்டு தாய், இரண்டு தந்தை என ஒரே குடும்பமாக வளர்க்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Identical twin sisters announce they both are pregnant | World News.