NEOCOV.. அதிக வீரியத்துடன் பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ்... மிக ஆபத்தானது என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் சீனாவின் வூகான் நகரில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல் நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.
உருமாறும் வைரஸ்
இதனிடையே கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து, மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
வூகான் விஞ்ஞானிகள்
இந்த நிலையில், நியோகோவ் (NeoCov) என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறிப்பட்டுள்ளதாக சீனாவின் வூகான் ஆய்வக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதே சமயத்தில் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என்றும், சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஸ்புட்னிக் முக்கிய தகவல்
இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘கடந்த 2012-2015 கால கட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்ட ‘மெர்ஸ்-கோவ்’ என்ற வைரஸுடன் இந்த நியோகோவ் வைரஸுக்கு தொடர்பு உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது நியோகோவ் என்ற புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.