'அந்த ஒரு காட்சி தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது'... 'என் வாழ்க்கையின் மோசமான நாட்கள் எது'?... கண்ணீருடன் மனம் திறந்த மியா கலீஃபா!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆபாசப் படங்களில் நடித்தது தான் தனது வாழ்க்கையில் மோசமான தருணங்கள் என மியா கலீஃபா உருக்கத்துடன் கூறியுள்ளார்.
'மியா கலீஃபா'. இந்த பெயருக்கு நிச்சயம் பெரிய அளவில் அறிமுகம் தேவைப்படாது. ஆபாச நடிகை என தன் மீது இருக்கும் பிம்பத்தை மாற்ற முயன்று வரும் மியா, சமூகம் சார்ந்த பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சமீபத்தில் கூட உலக கவனம் பெற்ற பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகத் தனது அழுத்தமான குரலைப் பதிவு செய்தார்.
இதற்குப் பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மியா, விவசாயிகளின் குரல் நிச்சயம் வெளியில் கேட்க வேண்டும் எனத் தனது கருத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்தும், தான் சந்தித்த மோசமான தருணங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ''எனது வாழ்க்கையில் மோசமான மற்றும் நான் மறக்க நினைக்கும் தருணங்கள் என்பது ஆபாசப் படங்களில் நடித்தது மட்டுமே.
எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாள் என்பது நான் முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் ஹிஜாப் அணிந்து கொண்டு நடித்த அன்று தான். நீங்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது நான் அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன், என அவர்களிடம் கூறினேன். ஆனால் அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.
ஆனால் அப்படி நான் நடிக்க மாட்டேன் எனச் சொல்வதற்குத் தயக்கமாகவும், சிறிது பயமாகவும் இருந்தது. நான் அவ்வாறு நடிக்க மாட்டேன் எனச் சொல்லி இருந்தால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் அதைச் சொல்வதற்கு எனக்குப் பயமாக இருந்தது. அந்த காட்சியை நடித்து முடித்துவிட்டு வந்த அடுத்த நாள் வரை எனக்கு எந்த மோசமான விளைவுகளும் வரும் எனத் தோன்றவில்லை. காரணம் பலர் ஆபாசப் படங்களில் நடித்து வருகிறார்கள். இதை எல்லாம் யார் மனதில் வைத்திருப்பார்கள்.
அடுத்த நாள் மறந்து விடுவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் எனது கணிப்பு பொய்த்துப்போனது. அந்த ஒரு காட்சி வைரலாக பரவியது. பலரும் யார் அந்த பெண் எனத் தேட ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் எனக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தது. என்னைச் சுட்டுக் கொல்லப் போவதாகவும் பல வகைகளில் மிரட்டல்கள் வந்தன. ஐஎஸ்ஐஎஸ் என்னை மிரட்டினார்கள் என்று நான் சொல்லமாட்டேன்.
அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்னை மிரட்டினார்கள். இணையம் மூலமாகவும் பல மிரட்டல்கள் மற்றும் ஆபாச அர்ச்சனைகள் என்னை நோக்கி வந்தது. அந்த காட்சி எடுக்கப்பட்டுச் சரியாக 3 மாதம் கழித்து எனது 24வது வயதில் இனிமேல் ஆபாசப் படங்களில் நடிப்பது இல்லை என முடிவு செய்தேன். எனது முடிவை அவர்களிடம் சொன்ன போது, எனது மனதை மாற்ற முயன்றார்கள். ஆனால் எனது முடிவில் நான் உறுதியாக இருந்தேன்.
நான் ஆபாசப் படங்களில் நடித்ததால் பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்ததாகப் பலரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் நான் ஆபாசப் பட உலகிலிருந்த 3 மாதங்களில் வெறும் சொற்ப வருமானமே பெற்றேன். ஆபாசப் படங்களில் நடிப்பவர்களைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகவே மட்டுமே பயன்படுத்துவார்கள் என மியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆபாச உலகை விட்டு வெளியே வந்த பின்னர் மனதளவில் தான் உணர்ந்த தனிமை குறித்து உருக்கத்துடன் கூறியுள்ள மியா, மனதளவில் நான் உடைந்து போனேன். வெளியில் செல்வதற்குக் கூட பயமாக இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் என்ன கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் என்ற எண்ணம் எனது மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் ஆபாசப் பட உலகம் குறித்து நிச்சயம் பேச வேண்டும் என முடிவு செய்தேன். ஏனென்றால் பல பெண்களும் கடத்தப்பட்டு, ஆபாசப் படங்களில் நடிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
பல பெண்களின் வாழ்க்கை இதனால் மோசமாகியுள்ளது. பல ஆண்கள் இந்தப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பெண்களுக்குப் புரிந்திராத ஒப்பந்தங்களைக் கையெழுத்திட வைக்கிறார்கள். எனவே பல பேட்டிகளில் ஆபாசப் பட உலகின் கருப்பு பக்கங்கள் குறித்துப் பேசினேன் என மியா குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆபாசப் படங்கள் மனித உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள மியா, ஆபாசப் படங்கள் பார்ப்பது அதிகமாகி பலர் அதற்கு அடிமையாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்கள் ஆபாச வீடியோக்களில் பார்க்கும் விஷயங்களை, அவர்கள் வாழ்வில் இருக்கும் பெண்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. இதனால் உறவுகளில் பல சிக்கல்கள் உருவாவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வருடத் தொடக்கத்தில் 1,60,000 டாலர் தொகையினை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மியா கலிஃபா நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.