“எங்கள சீட் பண்ணிட்டாங்க!”... “ஆபாச இணைய தளத்தில் அப்லோடு செய்யப்பட்ட வீடியோக்கள்”.. “கதறும் 22 பெண்கள்!”

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 05, 2020 08:03 PM

அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குட்பட்ட சாண்டிகோ மாகாணத்தில் இயங்கி வந்த ஆபாச தளத்தில் தங்களது வீடியோ பதிவிடப்பட்டு ஒளிபரப்பப் பட்டதாக 18 வயதில் இருந்து 23 வயதுக்குட்பட்ட 22 பெண்கள் அளித்துள்ள புகார் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Porn website cheated 22 girls in the name of modelling chance

விளம்பரங்களில் வாய்ப்பு தருவதாகக் கூறி பிரபல நிறுவனத்தினால் அணுகப்பட்ட இந்த பெண்கள் அனைவருமே மாடலிங் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர்கள். ஆனால் விளம்பரத்துக்காக வரவழைக்கப்பட்ட இந்த மாடலிங் பெண்களிடம், இவர்களின் வீடியோக்கள் தனிப்பட்ட முறையிலான டிவிடிக்களில் விளம்பர ரீதியலான விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்று மட்டும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து முதலில் உறுதிகூறப்பட்டது.

ஆனால் பின்னர் அனுமதி இன்றி, அந்நிறுவனம் அவர்களின் வீடியோக்களை குறிப்பிட்ட ஒரு ஆபாச தளத்தில் பதிவிட்டு தம் உற்றார், உறவினர் மத்தியில் பெரும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியதாக அப்பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 91 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் ஜேம்ஸ் பிராட் என்பவர் நியூஸிலாந்தைச் சேர்ந்தவர் என்பதும் 2012-ஆம் ஆண்டு சிறார் ஆபாச படத்தை வெளியிட்டு 16 வயது பெண்ணின் வாழ்வை சீரழித்ததற்காக நியூஸிலாந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் என்றும் அங்கிருந்து தப்பி கலிபோர்னியாவிற்கு வந்து தஞ்சமடைந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags : #PORN #SITE #GIRLS