'லெபனான் கோர விபத்து'... 'என்னோட மக்களுக்கு எதாவது செய்யணும்'... 'மியா காலிஃபா எடுத்த அதிரடி முடிவு'... பாராட்டிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 12, 2020 03:37 PM

உலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர். கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.

Mia Khalifa Is Auctioning Off Her Glasses To Raise Money For Beirut

உலகையே அதிரவைத்த இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரும் முன்னாள் ஆபாசப் பட நடிகையுமான மியா காலிஃபா லெபனான் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். லெபனானை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது மக்களுக்கு உதவி செய்ய இது தான் சரியான தருணம் எனக் கூறியுள்ளார். இதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றாகக் கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காகக் கொடுக்க இருக்கிறார்.

Mia Khalifa Is Auctioning Off Her Glasses To Raise Money For Beirut

இதற்கிடையே மியா காலிஃபா எடுத்துள்ள இந்த முடிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர் ஏலத்தை அறிவித்ததிலிருந்து மியாவின் கண் கண்ணாடியை வாங்குவதற்கு அதிகமான போட்டி நிலவுகிறது. தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இதுகுறித்து “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

The Lebanese government has resigned. Parliament is next. By choice or by force, either way, Lebanon has had enough while simultaneously having NOTHING. 6 days left on the auction for the original mia khalifa glasses to 100% benefit the @lebaneseredcross. Head to the link in my bio and let’s try to make a positive difference. Keep bidding, keep sharing, keep following accounts like @lebaneseredcross @beiruting @rimafakih @mouin.jaber @ginoraidy @thawramap @impact.lebanon @rebuilding.gemmayze @lebfoodbank. Keep sharing the links for fundraisers by the people, for the people, and DO NOT DONATE A SINGLE PENNY TO THE CORRUPT GOVERNMENT BACKED ORGANIZATIONS. The ones who hoard relief money, medical supplies, and food- only to re-sell to the Lebanese people at a 150% mark up. The ones who sit behind and watch the famine, economic collapse, and displacement of their own people on tv from their vacation homes in London, France, and Australia. Ban these pigs from every country in the world until they’re forced to live the same lifestyle they’ve imposed on the people in Lebanon.

A post shared by Mia K. (@miakhalifa) on

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mia Khalifa Is Auctioning Off Her Glasses To Raise Money For Beirut | World News.