'நீங்க ஏன் எதுவும் பேசாம இருக்கீங்க'... 'இந்திய பிரபலத்திடம் கேள்வி கேட்ட மியா கலீஃபா'... மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக மியா கலீஃபா குரல் கொடுத்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியப் பிரபலங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், தான் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் பிரியங்கா சோப்ராவின் மவுனம் குறித்து அவர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள மியா, "பிரியங்கா சோப்ரா எந்த நேரத்தில் பேசப் போகிறார்? எனக்கு ஆர்வமாக இருக்கிறது. பெய்ரூட் பேரழிவு அதிர்வுகளின் போது இருந்த ஷகிராவின் மவுனம் போல இது உள்ளது " என்று கலீஃபா ட்வீட் செய்துள்ளார்.
மியா கலீஃபா, பாப் நட்சத்திரம் ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், நடிகை சூசன் மற்றும் வழக்கறிஞர் மீனா ஹாரிஸ் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏற்கனவே ட்வீட் செய்தனர். இதனிடையே பிரியங்கா சோப்ரா தற்போது விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக "எங்கள் விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று எழுதியிருந்தது நினைவுகூர தக்கது.
Is Mrs. Jonas going to chime in at any point? I’m just curious. This is very much giving me shakira during the Beirut devastation vibes. Silence.
— Mia K. (@miakhalifa) February 7, 2021

மற்ற செய்திகள்
