"பொண்டாட்டி கால்-ல விழுகுறது ஒன்னும் தப்பில்ல".. திருமணத்தில் மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. திகைச்சுப்போன உறவினர்கள்..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்தில் மணப்பெண்ணின் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "இனி டீ வேண்டாம்.. இதை குடிங்க மக்களே"..பொருளாதார சிக்கலை தீர்க்க பாகிஸ்தான் அரசு எடுத்த புதுமையான முடிவு..!
இந்தியா முழுவதும் பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் இருக்கின்றன. இது அன்றாட வாழ்க்கையில் கூட பிரதிபலிக்க செய்கிறது. அதுவே திருமணம் உள்ளிட்ட சடங்குகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதுமே பொதுவாக மணமகள், மாப்பிள்ளையின் காலில் விழுவதை நாம் பார்த்திருபோம். மரபுகளின்படி நடைபெறும் இந்த சடங்குகள் காலம் காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாப்பிள்ளை ஒருவர் மணமகளின் காலில் விழுந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் மணமகனான அர்னவ் ராய் மற்றும் மணமகள் திதி கொராடியா இருவரும் திருமண சடங்கில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறிய இருக்கையில் இருவரும் அமர்ந்திருக்கும் போது, திடீரென எழுந்த அர்னவ் தனது மனைவியான கொராடியாவின் காலில் விழுகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கொராடியா அவரை மேலே நிமிர்த்த முயற்சிக்கிறார். இதனை தொடர்ந்து மெல்ல எழுந்த அர்னவ் கொராடியாவை அணைத்துக்கொள்கிறார். இதனைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்ததுடன் சிலர் ஆராவாரம் செய்கின்றனர்.
அவங்களுக்கு பிடிக்கல
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கொராடியா, " எங்களது உறவினர்களுக்கு அவர் என் காலில் விழுந்தது பிடிக்கவில்லை. ஆனால், பலரும் எனது காதில்' நீ அதிர்ஷ்டசாலி. மிகச்சிறந்த ஆணை தேர்ந்தெடுத்திருக்கிறாய்' என்றனர். உங்களை எப்போதும் சமமாக பாவிக்கிற இணையை தேர்ந்தெடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரையில் 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும், "இன்று இணையத்தில் நான் கண்ட அற்புதமான விஷயம் இதுதான். நீடூடி வாழ்க" என்றும் "அர்னவ் நீங்கள் மிகச் சிறந்த மனிதர். கோராடியா நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி" எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
திருமணத்தின்போது, மணமகளின் காலில் மாப்பிளை விழுந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
