திடீர்ன்னு வானம் ஃபுல்லா தென்பட்ட 'PURPLE' நிற கோடு.. அச்சத்தில் உறைந்த மக்கள்.. "கடைசி'ல தான் உண்மை தெரிஞ்சுருக்கு"!!
முகப்பு > செய்திகள் > உலகம்வானத்தில் அவ்வப்போது திடீரென ஏதாவது விசித்திரமான வண்ணம் தோன்றி, அப்பகுதியில் இருக்கும் மக்களை கடும் குழப்பத்தில் கூட ஆழ்த்தும்.
பொதுவாக, சூரியனில் இருந்து வரும் சோலார் காற்று காரணமாக, துருவ பகுதிகளில் வானம் வண்ணமாக தோன்றுவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தான், சிலி நாட்டில் உள்ள பகுதியில், திடீரென வானத்தில் பர்பிள் நிறத்தில் கோடுகள் தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
திடீரென இப்படி ஒரு நிறம் பல இடங்களில் தோன்ற ஆரம்பித்ததால், இதனைக் கண்ட மக்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். மேலும், புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிரவே, சிலி நாட்டில் தொடுவானம் பர்பிள் நிறத்தில் தோன்றிய விஷயம், பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.
என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் குழம்பி போகவே, சிலர் இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஏதேதோ விபரீதம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான வதந்திகளையும் கிளப்பி விட்டு, மக்கள் மத்தியில் பதற்றத்தையும் உண்டு பண்ணி இருந்தனர்.
இதன் பின்னர், எப்படி பர்பிள் நிறத்தில் வானம் தோன்றியது என்பதற்கான உண்மை காரணம் தெரிய வந்தது. முன்னதாக, வானிலை மைய அதிகாரிகளிடம் இது பற்றி விசாரித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், வானிலை காரணமாக ஏற்படவில்லை என்பது தெரிந்தது. தொடர்ந்து, பர்பிள் நிறத்துக்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்த நிலையில், ஒரு உப்பு மற்றும் அயோடின் தொழிற்சாலை தான் இதற்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
அங்கே இருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக, இப்படி வானம் பர்பிள் நிறத்தில் மாறியுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். அங்கே இருந்த பம்ப் ஒன்று செயல் இழந்துள்ள நிலையில், இதன் காரணமாக அயோடின் திட நிலையில் இருந்து வாயு நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது காற்றில் கலந்து ஏற்பட்ட வினை காரணமாக, பர்பிள் நிறம் உருவானதும் தெரிய வந்துள்ளது.
ஆனால், அதே வேளையில் இந்த அயோடின் கசிவு காரணமாக, யாருக்கும் ஆரோக்கிய பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.